நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே உள்ள தாசன்புதூர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தாசன்புதூர் பகுதியில் இருந்து வரும் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். தாசன்புதூர் பகுதியில் இருந்து அத்தனூர்-சேலம் செல்லும் சாலையின் ஓரத்தில் பள்ளம் உள்ளது. ஆனால் தடுப்பு சுவர் இல்லை. மேலும் மின்விளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவு நேரத்தில் இந்த சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் தவறி விழுந்து காயமடைகின்றனர். எனவே இப்பகுதியில் மின்விளக்கு அமைத்து, தடுப்புச் சுவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ராஜேஷ், நாமக்கல்.