நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் காய்கறி பயிர் செய்து அவைகளை வெண்ணந்தூர் தினசரி மார்க்கெட்டில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். விவசாயிகளின் நலன் கருதி பொதுமக்களுக்கு நேரடியாக விவசாயிகள் வியாபாரம் செய்து கொள்ள உழவர்சந்தை வெண்ணந்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சண்முகம், வெண்ணந்தூர், நாமக்கல்.