ஈரோடு மூலப்பாளையம் அண்ணமார் பெட்ரோல் பங்க் பஸ் நிறுத்தத்தில் அமைந்துள்ள சிக்னல் கம்பங்களில் வழிகாட்டி பலகைகளை மாட்டி விட்டால் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். போக்குவரத்து மிகுந்த இந்த இடத்தில் புதிதாக வரும் வாகன ஓட்டிகள் எந்த திசையில் திரும்ப வேண்டும் என்று குழம்பி நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி சிக்னல் கம்பங்களில் வழிகாட்டி பலகைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?