மரக்காணம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு காலரா, டெங்கு காய்ச்சல் உள்பட பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் பொதுமக்கள் தூங்க முடியாமல் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க ஊராட்சி ஒன்றிய பகுதியில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.