மயிலாடி பஞ்சாயத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இதனால், அந்த பகுதி பகலில் எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். இந்த வங்கியின் எதிரே உள்ள திறந்தவெளி மைதானத்தில் சிலர் மது குடித்து விட்டு பாட்டில்களை வீசுகின்றனர். சில நேரங்களில் அங்கேயே அமர்ந்து மது அருந்துவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திறந்தவெளி மைதானத்தில் மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.