பூதப்பாண்டி வடக்குத்தெரு அழகம்மன்கோவில் அருகில் புலிவீரன் குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் செடி, கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. மேலும், சிலர் குளக்கரையில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால், குளத்தின் தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, குளத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி தூர்வாரி, அங்கு குப்பைகளை கொட்டுபவர்கள் மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.