திண்டுக்கல் சந்தைப்பேட்டை சேலாங்கண்ணி தெருவில் சாலையின் குறுக்காக செல்லும் சாக்கடை கால்வாயின் மேல் அமைக்கப்பட்ட தரைப்பாலம் சேதமடைந்துள்ளது. பாலத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இரவில் அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே தரைப்பாலத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்