நாமக்கல் மாவட்டம் மோகனூர் பேரூராட்சி பகுதிகளில் தார்சாலையின் இருபுறமும் இரும்பு கம்பிகளால் தடுப்பு போடப்பட்டு உள்ளது. தற்போது பொதுமக்கள் நடந்து செல்ல போடப்பட்ட கம்பி தடுப்பு வரை கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் அந்த வழியே வாகனங்களில் செல்வோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். எனவே அதிகாரிகள் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நவலடி, மோகனூர், நாமக்கல்