நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளாளப்பட்டி கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு மண்சுவரால் கட்டப்பட்ட சங்கொலி நிலையம் உள்ளது. தற்போது அதன் அடிப்பகுதி அரித்த நிலையில் காணப்படுகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் அபாய கட்டத்தில் உள்ளது. எனவே விபத்துகள் ஏதும் ஏற்படும் முன் இதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சங்கர், கல்குறிச்சி, நாமக்கல்.