தர்மபுரி மாவட்டம் ஏரியூர் கடைவீதி பகுதியில் விதிமுறைகளை மீறி விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஏரியூர் கடை விதி பகுதியில் 10-க்கும் மேற்பட்ட பெரிய விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் காற்று அதிகமாக வீசும் போது விளம்பர பலகைகள் கீழே விழுந்து விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்ற உடனே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- செண்பகவள்ளி, ராமகொண்டஅள்ளி, தர்மபுரி.