தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் அமானி மல்லாபுரம் ஊராட்சியில் உப்பாரஅள்ளி கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு செயல்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடத்திற்கு அருகே ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் உள்ளது. இந்த சுகாதார வளாகம் கடந்த 3 ஆண்டுகளாக தண்ணீர் இல்லாததால் பயன்படுத்தப்படாமல் புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவி, பாலக்கோடு, தர்மபுரி.