சென்னை சிந்தாதிாிப்பேட்டை, அருணாச்சலம் தெருவில் உள்ள மாநகராட்சி விளையாட்டு திடலின் வாயிற்கதவுடன் கூடிய சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது. நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் வாலிபர்கள் விளையாட்டு திடலில் பயிற்சி செய்கின்றனர். அசம்பாவிதம் எதும் நடப்பதற்குள் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உடைந்த விளையாட்டு திடலின் முகப்பு பகுதியை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.