நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே அலங்காநத்தம் பிரிவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு மயான வசதி இல்லாததால் சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் நாமக்கல்லில் உள்ள எரிவாயு தகன மேடைக்கு இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்லும் நிலை உள்ளது. எனவே பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் அலங்காநத்தம் பிரிவு பகுதியில் மயான வசதி செய்து கொடுக்க வேண்டும்.
-கோபால், எருமப்பட்டி.