இருக்கைகள் அமைக்க வேண்டும்

Update: 2022-07-24 16:11 GMT

சேலம் அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தில் வரி பணம் செலுத்த வரும் மக்கள் அமரும் இருக்கைகள் உடைந்தும், துருப்பிடித்தும் காணப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் இருக்கை வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர். அதுவும் முதியவர்களின் நிலை சொல்லி மாளாது. எனவே அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தில் சேதமடைந்த இருக்கைகளை உடனே சீரமைக்க வேண்டும். இல்லையென்றால் அங்கு புதிய இருக்கைகள் அமைக்க வேண்டும்.

-செல்வன், சேலம்.

மேலும் செய்திகள்