சேலம் ஏற்காடு சாலையில் சின்னகொல்லப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதற்கு அருகில் பஸ் நிறுத்தம் உள்ளது. அங்கு பயணிகள் நிழற்கூடம் இல்லை. இதனால் சுகாதார நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் மிகவும் அவதியடைகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி இங்கு பயணிகள் நிழற்கூடம் அமைத்து தர வேண்டும்.
-மஹமூத், சின்னகொல்லப்பட்டி, சேலம்.