திருச்சி மாவட்டத்தில் 67 வருவாய் கிராமங்கள், பச்சைமலை மலைவாழ் பழங்குடி மக்களை உள்ளடக்கிய துறையூர் வட்டத்திலுள்ள பெண்கள், தங்களது புகார்களுக்காக சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள முசிறி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. விசாரணை மற்றும் பின்தொடர்புகளுக்காக பெண்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. துறையூரில் மகளிர் போலீஸ் நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.