இளையான்குடி அருகே சோதுகுடி கிராமத்தில் 15க்கும் மேற்பட்ட குரங்குகளின் தொல்லைகளால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். பெரும்பாலும் பகல் நேரங்களில் குரங்குகள் ஊருக்குள் புகுந்து வீடுகளில் உள்ள உணவுப் பொருட்களை தின்று பாழாக்குகின்றன.இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அச்சப்படுகின்றனர். எனவே வனதுறை அதிகாரிகள் குரங்குகளை பிடித்து வனத்தில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.