விளாத்திகுளம் அருகே புளியங்குளம் மெயின் ரோட்டில் உள்ள ஊர் பெயர் பலகையில் ஆங்கில எழுத்துகள் தவறாக எழுதப்பட்டு உள்ளதாக மஞ்சுநாதன் என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அதை உடனடியாக சரிசெய்யப்பட்டு உள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.