நாகை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எதிரே தாமரைகுளம் பூங்கா உள்ளது. இந்த பூங்கா தற்போது சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து புதுப்பொலிவு பெற்று திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது. இந்த நிலையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மதுப்பிரியர்கள் பூங்காவுக்குள் நுழைந்து மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் பூங்கா மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறிவருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பூங்காவை திறந்து விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.