விளம்பர பேனர்கள் அகற்றப்படுமா?

Update: 2023-08-06 13:28 GMT

கோவை சூளேஸ்வரன்பட்டியில் இருந்து வால்பாறை செல்லும் சாலையோரத்தில் மின்கம்பங்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. அவை வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் உள்ளன. மேலும் காற்றில் சில நேரங்களில் சாய்ந்து விடுவதால், அந்த வழியே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன்பு அங்கு வைக்கப்பட்டு உள்ள அனுமதியற்ற விளம்பர பேனர்களை அகற்ற அதிகாரிகள் முன்வருவார்களா?.

மேலும் செய்திகள்