நாய்கள் தொல்லை

Update: 2022-07-24 15:54 GMT

நாகை மாவட்டம் திட்டச்சேரி நாகை-நன்னிலம் நெடுஞ்சாலையில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் கூட்டமாக அங்கும், இங்கும் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஒட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், நாய்கள் வாகனங்களை துரத்தி செல்வதால் வாகனஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்