அடிப்படை வசதிகள் வேண்டும்

Update: 2023-08-06 11:34 GMT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பழைய அரசமங்கலம் கிராமத்தில் சுமார் 200 மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான தார் சாலை வசதி இன்றி மண் சாலையாகவே உள்ளது. இதனால் மழை காலத்தில் சாலையில் தண்ணீர் தேங்குவதால் சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இப்பகுதியில் தனி ரேஷன் கடை இல்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்