கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம்- நொய்யல் செல்லும் சாலையில் கவுண்டண்புதூர் செல்வதற்காக பிரிவு சாலை செல்கிறது. இந்த பிரிவு சாலை அருகே சேமங்கி செல்வநகர் உள்ளது. அப்பகுதியை சேர்ந்த இறந்தவர்களின் உடலை புதைப்பதற்கும், எரிப்பதற்கும் சுடுகாடு உருவாக்கப்பட்டது. அந்த சுடுகாட்டில் இறந்தவர்கள் சிலரை புதைத்தும், சிலரை எரித்தும் வருகின்றனர். இந்நிலையில் சுடுகாட்டில் சுற்று சுவர் இல்லாததால் ஏராளமான செடி, கொடிகள், முற்கள் முளைத்து புதர்மண்டி காணப்படுகிறது. இதன் காரணமாக இறந்தவர்களை உடனடியாக புதைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உள்ளாட்சித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சுடுகாட்டில் முளைத்துள்ள செடி, கொடிகளை அகற்றி சுத்தம் செய்து இறந்தவர்களை புதைப்பதற்கும், எரிப்பதற்கும் வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.