விழுப்புரம் மாவட்டம் திருநந்திபுரம் ஊராட்சி எண்ணாயிரம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அலுவலக கட்டிடமும், சுய உதவிக்குழு கட்டிடமும் பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. மேலும் கட்டிடத்தை சுற்றிலும் செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. எனவே இந்த 2 கட்டிடங்களையும் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.