திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு பஸ்நிலையம் செல்லும் ஆட்டோக்கள் இந்திராநகர், போடிநாயக்கன்பட்டி, மென்டோன்சா காலனி, ஆரோக்கியமாதா தெரு ஆகிய பகுதிகள் வழியாக செல்கின்றன. இந்த ஆட்டோக்கள் மின்னல் வேகத்தில் செல்வதால் மாணவ-மாணவிகள், முதியவர்கள் அச்சத்துடன் சாலையில் செல்லும் நிலை உள்ளது. எனவே ஆட்டோக்கள் தெருக்களில் செல்வதை தவிர்த்து மெங்கில்ஸ் சாலை வழியாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.