மோகனூரில் இருந்து காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரை வழிப்பாலம் அருகே மோகனூர் பேரூராட்சி பகுதியில் உள்ள குப்பைகளை கொட்டுகின்றனர். மேலும் குப்பையை தீ வைப்பதால் அந்தப் பகுதியில் புகை மூட்டமாகவே காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி திணறும் நிலை உள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலா, மோகனூர்.