கொல்லிமலையில் உள்ள செம்மேட்டில் தோட்டக்கலை பண்ணை செயல்பட்டு வருகிறது. அங்குள்ள நுழைவுவாயில் பகுதியில் உள்ள சாய்வு நாற்காலி சேதம் அடைந்து கிடக்கிறது. இதனால் அங்கு வரும் மலைவாழ் மக்கள் உட்கார முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே அங்குள்ள சாய்வு நாற்காலியை சீரமைக்க வேண்டும் என்பது மலைவாழ் மக்களின் கோரிக்கையாக உள்ளது.
-சந்திரசேகரன், செம்மேடு.