வெண்ணந்தூர் அடுத்த வெள்ளப்பிள்ளையார் கோவில் அருகே காவலர் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு 14 வீடுகள் உள்ளன. இதில் உள்ளூர் போலீசார் உள்பட 5 வீடுகளில் போலீசார் வசித்து வருகின்றனர். மற்ற வீடுகளை போலீசார் ஓய்வெடுக்க பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ஒரு வீடு குடோனாக பயன்படுத்தப்படுகிறது. சுற்றுச்சுவர் இல்லாததால், ஆடு, மாடுகள் குடியிருப்பு வளாகத்தில் சுற்றித்திரிவதுடன், பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே இந்த குடியிருப்புக்கு சுற்றுச்சுவர் அமைக்க மாவட்ட போலீஸ் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார், வெண்ணந்தூர்.