சேலம் மாவட்டம், மல்லமூப்பம்பட்டியில் மயானம் பராமரிப்பு இல்லாமல் இறந்தவர்களை அடக்கம் செய்ய முடியாமல் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் அங்கு விஷஜந்துகள் அதிகமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து முட்புதர்களை அகற்றி மயானத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-முருகன், மல்லமூப்பம்பட்டி.