ஆபத்தான நிலையில் சுற்றுச்சுவர்

Update: 2023-08-02 16:16 GMT

பாலக்கோடு தாலுகா அலுவலகம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை ஒட்டியுள்ளது. இந்த அலுவலக சுற்றுச்சுவர் கட்டி பல ஆண்டுகள் ஆன நிலையில் சுவரில் விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. அவ்வாறு விழுந்தால் பள்ளி மாணவர்களின் உயிருக்கு ஆபத்தாக முடியும். எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குரு, பாலக்கோடு.

மேலும் செய்திகள்