அடிப்படை வசதி தேவை

Update: 2023-08-02 15:46 GMT
ராமநாதபுரம் மாவட்டம் அருகே ஆர்.காவனூர் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் முறையாக செய்யப்படாததால் நோயாளிகள் அவதியடையும் நிலை உள்ளது. சுகாதார நிலையத்தில் பயன்படுத்தப்படும் படுக்கைகள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்திதர நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்