ராமநாதபுரம் மாவட்டம் மங்கலக்குடியில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் சுற்றுச்சுவர் இல்லாத காரணத்தால் கால்நடைகள் உள்ளே சென்று நோயாளிகளை பயமுறுத்தி வருகின்றன. மேலும் பாம்பு போன்ற விஷப்பூச்சிகளும் உள்ளே வரும் நிலையும் உள்ளது. எனவே இந்த மருத்துவமனையில் சுற்றுச்சுவர் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.