பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், கோவிலில் உள்ள விற்பனை கூடங்களில் பஞ்சாமிர்தம், பிரசாதம் ஆகியவற்றை வாங்கி செல்கின்றனர். அவ்வாறு வாங்கும் போது சில்லறை பிரச்சினை ஏற்படுகிறது. தற்போதைய சூழலில் பெரும்பாலானோர் மின்னணு பரிவர்த்தனைக்கு மாறியுள்ளனர். எனவே பழனி முருகன் கோவிலிலும் போன்பே, ஜிபே போன்ற மின்னணு பரிவர்த்தனை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படுமா?