திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா சித்தனங்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது. அலுவலக கட்டிடம் சேதமடைந்து காணப்பட்டதால் கட்டிடம் இடிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை இடிக்கப்பட்ட இடத்தில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்படாமல் உள்ளது. இதனால், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் சிகிச்சை பெற நீண்ட தூரம் சென்று வரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை மீண்டும் கட்டித்தர நடவடிக்கை எடுப்பார்களா?