தூர்வாரப்படாத குளம்

Update: 2023-08-02 13:08 GMT

கரூர் மாவட்டம் முத்தனூர் பகுதியில் புகழூர் வாய்க்கால் அருகில் பெரியகுளம் வெட்டப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மழைநீர், உபரி நீர் இந்த குளத்தில் தேங்கிய பிறகு அந்த குளத்தில் இருந்து அருகில் உள்ள புகழூர் வாய்க்காலுக்கு தண்ணீர் செல்கிற வகையில் குளம் வெட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் வெட்டப்பட்டுள்ள குளத்தில் ஏராளமான சம்புகள், செடிகொடிகள் முளைத்துள்ளன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்