கரூர் மாவட்டம் நொய்யல் அருகே வேலாயுதம்பாளையம்- நொய்யல் செல்லும் தார் சாலை ஓரத்தில் மரவாப்பாளையத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிழற்குடையில் பல்வேறு வகையான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும் இரவு நேரங்களில் மது பிரியர்கள் இந்த நிழற்குடைக்குள் அமர்ந்து மது அருந்திவிட்டு தாங்கள் கொண்டு வந்துள்ள உணவு பொருட்களை சாப்பிட்டுவிட்டு அங்கேயே போட்டு செல்கின்றனர். பாட்டில்களையும் உடைத்துப் போட்டு செல்கின்றனர். இதனால் இந்த நிழற்குடையை பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.