பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மருவத்தூர் கிராமத்தில் அம்மன் குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வந்த கலக்கிறது. இதனால் குளத்தில் தேங்கி நிற்கும் தண்ணீர் மாசு அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் குளத்தை தூர் வாராமல் உள்ளதால் மழை பெய்யும் போது, அதிக அளவிலான தண்ணீரை இந்த குளத்தில் சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குளத்தில் கழிவுநீர் கலக்காத வகையில் நடவடிக்கை எடுப்பதுடன, குளத்தையும் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.