ஆளூரில் அரசு மேல்நிலைப்பள்ளியும், தொடக்கப்பள்ளியும் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளன. இங்கு சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமடைந்து பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால், இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறிவருகிறது. எனவே, மாணவர்கள் நலன்கருதி பள்ளியின் சுற்றுச்சுவரை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வேணு, ஆளூர்.