சங்கராபுரம் தாலுகா பூட்டை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால் பணிகள் தொடங்கி 2 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது வரை முடிக்கப்படாமல் உள்ளது. எனவே ஆமை வேகத்தில் நடைபெறும் பணியை துரிதப்படுத்தி, விரைவாக ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்கின்றனர்.