விழுப்புரம் புதிய பஸ்நிலையத்தில் உள்ள சாலை பெயர்ந்து பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த அபாயகரமான பள்ளதால் விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. சில சமயங்களில் அவரச, அவசரமாக பஸ் ஏறச்செல்லும் பயணிகள் இந்த பள்ளத்தில் தடுக்கி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே பள்ளதை உடனடியாக மூட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?