விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வில்நகர் செல்லும் வழியில் வாய்க்கால் செல்கிறது. இதை கடந்த செல்வதற்கு தற்காலிகமாக இரும்புக்குழாய் அமைத்து அதன்மேல் மண்கொட்டப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் இந்த தற்காலிக பாலம் அடித்துசெல்லப்படுவதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே அப்பகுதியில் சிறுபாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.