நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சியில் போலீஸ் நிலையம் பின்புறம் காவலர் குடியிருப்பு உள்ளது. இதில் ஏராளமான காவலர்கள் குடியிருகின்றனர். இந்த நிலையில் காவலர்கள் குடியிருப்பின் 2-வது மாடியில் பின்பகுதியில் ஒரு மரக்கன்று வளர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் கட்டிடம் சேதமடைந்து விரிசல் விழகிறது. மேலும் கட்டிடம் இடியும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த செடியை அகற்றி கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவராஜ், பரமத்திவேலூர், நாமக்கல்.