தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா சிக்கலூர் கிராமத்தின் அருகில் மாமரத்து ஏரி, புது ஏரி ஆகிய ஏரிகள் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. ஏரி தற்போது வறண்ட நிலையில் காணப்படுகிறது. இதனால் வெயில் காலங்களில் தண்ணீர் தட்டுபாடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த ஏரியை தூர்வார நடவடிக்கை எடுப்பார்களா ?
-சந்தோஷ், தர்மபுரி.