வெள்ளிமலை பேரூராட்சிக்கு உட்பட்ட அம்மாண்டிவிளையில் முகுந்தன்குளம் உள்ளது. இந்த குளத்தை அம்மாண்டிவிளை சுற்றுவட்டார பகுதி மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வந்தனர். மேலும், பேச்சிப்பாறை அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் முட்டம் கால்வாய் வழியாக இந்த குளத்திற்கு வந்து சேருவதால் சுற்றுவட்டார விவசாய நிலங்களும் பயன்பெற்று வந்தனர். தற்போது முறையாக பராமரிக்காததால் பல ஆண்டுகளாக குளத்தில் செடிகொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. எனவே, செடிகொடிகளை அகற்றி குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.