பண்ருட்டி தாலுகா வீரசிங்கன்குப்பம் ஊராட்சியில் உள்ள புலவன்குப்பம் கிராமத்தில் கருமக்காரிய கொட்டகை இல்லை. இதனால் அப்பகுதியில் இறந்தவர்களின் உடலை திறந்தவெளியில் வைத்து இறுதிச்சடங்கு செய்யும் அவலநிலை உள்ளது. எனவே அப்பகுதியில் கருமக்காரிய கொட்டகை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.