சேந்தமங்கலம் அருகே பொம்மசமுத்திரம் ஏரி பகுதியில் தற்போது புறவழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருவதால் அங்கு நான்கு வழி பாதையாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்குச் செல்ல வழி தெரியாமல் சிரமப்படுகின்றனர். எனவே அப்பகுதியில் கொல்லி மலைக்குச் செல்லும் வழி என்று அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
-ரமேஷ், காந்திபுரம்.