தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் பஸ் நிலையம் அருகே மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு இருந்து ஆதிதிராவிடர் காலனிக்கு பாதை வருகிறது. அரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் வாகனங்களில் செல்பவர்கள் இந்த பாதை வழியாக தவறி ஆதிதிராவிடர் காலனிக்குள் நுழைந்து விடுகிறார்கள். எனவே மாரியம்மன் கோவில் எதிரில் அரூர் மற்றும் அதிகாரப்பட்டி செல்லும் சாலை என்று பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணி, பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.