ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுவட்டார பகுதியில் ஒரு சில சாலை ஓரங்களில் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது கருவேல மரத்தில் உள்ள கிளைகள் படுவதால் அதன் முட்கள் குத்தி காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.