சென்னை அடையாறு, இந்திரா நகரில் இயங்கி வந்த தபால் நிலையம் 10 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. எனவே, அந்தபகுதி மக்கள் தபால் நிலையம் செல்ல 2 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டியுள்ளது. இதனால் வயதானோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீண்டும் தபால் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.