அரசூர் கூட்டுரோட்டில் வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்டது. இருப்பினும் தற்போது வரை திறப்பு விழா காணாமல் காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அரசூரில் இருந்து வெகுதூரத்தில் உள்ள பழைய வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு செல்லும் நிலை உள்ளது. எனவே காட்சிப்பொருளாக உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.